Latestமலேசியா

முக்கிய கொலைகள்; லிம் கிட் சியாங்கை விசாரிக்கக் கோரி நஜிப் தரப்பில் புகார்!

இஷ்கண்டார் புத்ரி, அக்.13- மிகவும் பரபரப்பாக கருதப்படும் சில கொலைகள் தொடர்பாக போலீசார் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் தனி உதவியாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.

ஜசெக வின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங்கை விசாரித்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த உதவியாளர் போலீஸ் புகாரில் கோரியுள்ளார்.

இந்த விசாரணைகளில் நஜிப் குற்றமற்றவர் என்பது நிருபணமானால், அத்தகைய அவதூறுகளில் இருந்து தம்முடைய முதலாளியான நஜிப்பின் களங்கம் துடைக்கப்படவேண்டும்.

அதோடு இஷ்கண்டார் புத்ரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த உதவியாளர் போலீசை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அராப் மலேசியா வங்கியின் நிறுவனர் ஹுசைன் நஜாடி, மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயா, அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹோக் மற்றும் அரசு தரப்பு மூத்த வழக்கறிஞரான கெவின் மொராய்ஸ் ஆகியோரின் கொலைகள் தொடர்பில் இந்தப் புகார் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்தக் கொலைகள் தொடர்பான வழக்குகளை அரசாங்கம் மீண்டும் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் நஜிப்பிற்கும் லிம் கிட் சியாங்கிற்கும் இடையே அண்மையில் தொடர்ந்து வாக்குவாதம் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker