Latestஉலகம்

#Mee Too -பாலியல் புகார்கள்: விசாரிக்க தனிக்குழு -இந்திய அரசு!

புதுடில்லி அக்.13- மத்திய அமைச்சர் ஒருவர் மீது 10 பெண் பத்திகையாளர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு தனிக்குழு அமைக்க முடிவெடுத்துள்ளது.

இந்தியா முழுக்க இந்த #Mee Too   (மீ-டூ) பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த  ஹேஸ்டேக் தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஹேஸ்டேக் நிறைய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தித் திரைப்பட உலகில் தனுஸ்ரீ டத்தா கொடுத்த புகாரும் சின்மயி கொடுத்த புகாரும் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் #Mee Too  மூலம் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு தனிக் குழு அமைக்க முடிவெடுத்துள்ளது. இதில் அளிக்கப்படும்  புகார்களை அனைத்தையும் விசாரிக்கும் வகையில் இக்குழு அமைக்கப்படுகிறது என்று இந்திய மகளிர் மற்றும் சிறார் நலப் பாதுகாப்பு அமைச்சர் மோனிகா காந்தி அறிவித்துள்ளார்.

இதில் முன்னாள் நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், மனநல வல்லுனர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள் இவர்கள் பெண்கள் கொடுக்கும் புகார் மீது  நடவடிக்கை எடுப்பார்கள். அதே போல் பெண்களுக்கு தேவையான மனநல உதவிகளையும் செய்வார்கள் என கூறப்படுகிறது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker