Latestஉலகம்

அமெரிக்கத் தேர்தலை குறிவைத்து 3 கோடிப் பேரின் பேஸ்புக் தகவல் திருட்டா?

சான் பிரான்சிஸ்கோ, அக்.15- நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்கா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 3 கோடி பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிப் பேர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தீவிரமாக பயன்படுத்தி தகவல்களையும் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

அண்மைய காலமாக, பேஸ்புக் பயனாளிகள் 5 கோடிப் பேரின் கணக்குகளுக்குள் “வியூ ஆஸ்” என்னும் அம்சத்தின் மூலம் ஊடுருவல் பேர்வழிகள் சட்ட விரோதமாக இணைய தளங்களில் புகுந்து திருடியிருக்கிறார்கள் எனக் கருதப்படுகிறது.

ஏற்கனவே 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால் திருடப்பட்டதாக தெரியவந்தது. இந்நிலையில் 5 கோடிப்பேரின் பேஸ்புக் கணக்குகளுக்கு ஊடுருவல்காரர்கள் புகுந்ததில் சுமார் 3 கோடிப்பேரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைரோஷன் கூறுகையில், பேஸ்புக்கில் புகுந்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு படையினர் விசாரணை நடத்துவதால் கூடுதல் விவரங்களை வெளியிட முடியாதநிலை இருப்பதாக கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் சுமார் 1.5 கோடி பேரின் பெயர்கள் தொலை பேசி எண், மின் அஞ்சல் முகவரிகள் ஆகியவற்றை களவாடியதில் சமப்ந்தப்பட்டவர்கள் யார் என்பதில் மர்மம் நீடிக்கிறது என்று தெரிவித்தார்.

என்ன நோக்கத்திற்காக இதை இவர்கள் செய்தார்கள் என்பது உறுதி செய்யப்படா விட்டாலும் அமெரிக்காவில் நவம்பர் 6 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக இது நடந்ததா? என்ற சந்தேகம் தொடர்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker