Latestவிளையாட்டு

இளைஞர் ஒலிம்பிக் ஹாக்கி: தங்கம் வென்று வரலாறு படைத்தது மலேசியா!

கோலாலம்பூர், அக்.15- அர்ஜெண்டினாவின் புவனர்ஸ் நகரில் நடந்து வரும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில், ஹாக்கி ஆட்டத்தில் மலேசியக் குழு, தங்கப் பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைத்தது.

நேற்று நடந்த இறுதியாட்டத்தில், பலம் பொருந்திய இந்தியக் குழுவை 4-2 என்ற கோல்கணக்கில் மலேசியா வீழ்த்தி தங்கத்தை வென்றதாக குழுவின் பயிற்சியாளர் வாலஸ் டான் தெரிவித்தார்.

இளைஞர் ஒலிம்பிக்கின் ஐவர் ஹாக்கிப் போட்டிக்கு மலேசியா தேர்வு பெற்றது இதுவே முதன் முறை என்ற நிலையில் அந்த முதல் முயற்சியிலேயே தங்கத்தை வென்றுள்ளது என்றார் அவர்.

மலேசியாவின் சார்பில் இரு கோல்களை அக்ஹிமுல்லா அனுவார் அடித்தார். இதர இரு கோல்களை முகமட் ஃபிர்டாவுசும் அமிருல்லா ஹமிசானும் அடித்தனர். இந்தியாவின் இரு கோல்களையும் குழுவின் கேப்டனான விவேக் பிரசாத் அடித்தார்.

மேலும், 18 வயதுடைய மலேசிய வீரரான அக்ஹிமுல்லா, இந்தப் போட்டியில்மொத்தம் 22 கோல்களை அடித்து, அதிக கோல்களை அடித்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

ஹாக்கிப் போட்டியின் இறுதியாட்டம் ஒன்றில் இந்தியாவை வெல்வது அவ்வளவு எளிதல்ல என்பதோடு, உலக இளைஞர் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் முதன் முறையாக தங்கத்தை வென்று மலேசியா வரலாறு படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker