Latestமலேசியா

சீனா -மலேசிய உறவில் சிக்கலா?! – மகாதீர் விளக்கம்

கோலாலம்பூர், அக்.15- மலேசியாவிலிருந்து 5லட்சம் டன்கள் செம்பனை எண்ணெய்யை சீனா இறக்குமதி செய்யவிருக்கிறது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீன நாட்டைச் சார்ந்த நிறுவனங்கள் மலேசியாவில் மெகா திட்டங்களை மேற்கொள்ளவிருந்தன. ஆனால், பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அத்திட்டங்களில் பல ரத்து செய்யப் பட்டன. அதனைத் தொடர்ந்து, மலேசியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையிலான உறவுகள் ஆயர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விகளுக்கு மகாதீர் பதிலளித்த போது மேற்கண்ட விபரத்தை தெரிவித்தார். “மலேசியாவிலிருந்து மேலும் 500,000 டன்கள் செம்பனை எண்ணெயை நியாயமான விலைக்கு இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டுள்ளது” என்று மகாதீர் சொன்னார்.

சமூக வலைத்தளங்களில், சீன சுற்றுலா பயணிகள் மத்தியில் மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. அப்பிரச்சனையை களைய மலேசிய அரசாங்கம் என்ன முயற்சிகளை எடுத்துள்ளது என்றும் வீ கா சியோங் கேள்வி எழுப்பினார்.

சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்றம்- இறக்கம் காணப்படுவது இயல்பான விஷயம். சுற்றுலா காலங்களில், சுற்றுலா பயணிகள் வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள இம்முறை முடிவெடுத்திருக்கக் கூடும் என்று மகாதீர் கூறினார்.

இருந்த போதிலும், சீனா சுற்றுலாப் பயணிகளுக்கான் விசா கட்டணத்தை அரசாங்கம் குறைக்கவிருப்பதாக பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

அமெரிக்கா-சீனா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக யுத்தம் குறித்து கெத்தேரே நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஶ்ரீ அன்வார் மூசா கேள்வி எழுப்பினார். மலேசியாவின் ஆதரவு சீனாவிற்கா அல்லது மலேசியாவிற்கா என்று அவர் வினவினார்.

சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தக போரினால் மலேசியாவிற்கு எவ்வித பாதகமும் ஏற்படாது என்றும், அதன் வாயிலாக மலேசியாவிற்கு நன்மைகள் தான் ஏற்படும் என்று மகாதீர் சொன்னார். “அவ்விரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போரில் மலேசியா பங்கெடுத்துக் கொள்ளாது” என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker