Latestஇந்தியா

‘மலேசியாவுக்கு என்னுடன் வருகிறாயா?’- வைரமுத்து வரம்பு மீறினாராம்! – பெண் புகார்

சென்னை, அக்.15- கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வந்த பாடகி சின்மயியை அடுத்து, தற்போது மற்றொரு பெண் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

பாடகியாகும் கனவோடு வந்த பெண்ணை வைரமுத்து ஒரு கடை விளம்பர விஷயத்திற்காக சந்தித்துள்ளார்.தனது அலுவலகத்திற்கு அழைத்து அப்பெண்ணை சந்தித்த வைரமுத்து, அதன் பின் அப்பெண்ணின் தொலைபேசிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை செய்ததாக அந்தப் பெண் கூறியிருக்கிறார்.

“நான் ஒரு விருது வாங்க மலேசியா செல்கிறேன். என்னுடன் வருகிறாயா?” என ஒருநாள் கேட்டுள்ளார். “பாடுவதற்காகவா” என அப்பெண் கேட்க, “இல்லை உனக்கு இது கூட புரியவில்லையா ? சினிமாவில் இதெல்லாம் சாதரணம் கொஞ்சம் அனுசரித்து நடந்துக்கணும்” எனக் கூறியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பெண் முடியாது என கூறியதும், “உனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிடுவேன்” என மிரட்டி வைரமுத்து போனை வைத்து விட்டாராம். இந்தச் சமபவம் 20 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக அந்தப் பெண் இப்போது தற்போது கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker