Latestமலேசியா

அதிக அன்னிய தொழிலாளர்கள்: அதிக லெவி! புதிய முறை வருமா?

கோலாலம்பூர், அக்.16-‘அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால், அதிக லெவிக் கட்டணம் செலுத்த வேண்டும்என்ற முறையை அமல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு நியமிக்கும் நிறுவனங்கள் அல்லது உணவகங்கள், கூடுதலான லெவியை செலுத்த வேண்டும் என்ற சிங்கப்பூரின் விதிமுறையை மலேசியாவில் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரே அடுக்கு லெவி முறைக்கு பதிலாக இந்தப் ‘பல அடுக்கு’ லெவி முறை, செயல்படுத்தப் படும். அவ்வாறு செய்வதன் வாயிலாக, வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு நியமிப்பதை நிறுவனங்கள் குறைத்துக் கொள்ளக் கூடும் என்று உள்துறை அமைச்சு கூறியது.

“ஒரு வெளிநாட்டு தொழிலாளருக்கு ரிம.1,850 கட்டணத்தை செலுத்தும் முதலாளி, மேலும் 150 வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால், முதல் 50 தொழிலாளர்களுக்கு தலா ரிம.1,850-ஐ லெவி கட்டணமாக செலுத்த வேண்டும்.

“மற்ற 100 தொழிலாளர்களுக்கு மேலும் கூடுதல் லெவி கட்டணம் வசூலிக்கப் படும்” என்று உள்துறை அமைச்சின் வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரிவின் சார்பில் பேசிய கைரில் ஷா, வழக்கறிஞர் மன்றம் ஏற்பாடு செய்த வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பிலான விவாதத்தின் போது தெரிவித்தார்.

இதனிடையில், நாட்டில் தங்கி வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு காலத்தை 10 ஆண்டுகளுக்கும் குறைவாக குறைக்க அரசாங்கம் உத்தேசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள், சுமார் 13 ஆண்டுகள், மலேசியாவில் தங்கி தொழில் புரியலாம். பத்து ஆண்டுகளில், அவர்களுக்கு ரிம.10,000 லெவி கட்டணமாக செலுத்தப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker