Latestஉலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: சீனாவும் தலையிட்டது – டிரம்ப் தடாலடி

வாஷிங்டன், அக். 16- கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று அதிபர் டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்ரஞ்சாட்டப்பட்டு வருகிறது. அதே வேளையில் அண்மையில் சீனாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதாவது தான் அமெரிக்க அதிபராக இருப்பதை சீனா விரும்பவில்லை. அதனால், இந்த ஆண்டுக்குள் அமெரிக்காவில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு சீனா முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை உடனடியாக சீனா மறுத்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் சிபிஎஸ் செய்திச்சேனலுக்கு அதிபர் டிரம்ப் அளித்த ஒரு மணி நேர பேட்டி ஒளிபரப்பப்பட்டது. அதில் சீனா மீது அவர் புதியதொரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்ததாக அப்போது பகிரங்கமாக தெரிவித்தார். சீனா மீது டிரம்ப் இது போன்ற குற்றச்சாட்டை முன் வைப்பது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: “அமெரிக்கா தேர்தலில் ரஷ்யா தலையிட்டது . அதைவிட அதிகமாக சீனாவும் இதில் தலையிட்டது என்றே நினைக்கிறேன். இது தான் மிகப் பெரிய பிரச்னை.

‘இப்படி நான் சொல்வதால் ரஷ்யாவின் மீது கூறிய குற்றச்சாட்டில் இருந்து விலகிச் செல்கிறேன் என்று அர்த்தம் அல்ல. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது. ஆனால், இதில் சீனாவின் குறுக்கீடும் இருந்துது என்று தான் சொல்கிறேன்”. -இவ்வாறு அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker