Latestவாழ்க்கை

ஊதுபத்தி புகையால் உடல் நலனுக்கு பாதிப்பு! ஆய்வில் தகவல்

பெய்ஜிங், அக்.16- ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசு வர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையை விட அதிக ஆபத்தானது என ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

வீடுகளில் பெரும்பாலும் ஊதுபத்தி பயன்படுத்துகிறார்கள். வீடு முழுவதும் நறுமணம் கமழ செய்யும் ஊதுபத்தியில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்ககூடிய நுண்நுகள்களும் கலந்திருக்கின்றன.

அதிலும் ஒரு சில ஊதுபத்தி வகைகளில் இரசாயன பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப் படுகின்றன. அவைகளால் உடல் உறுப்புகள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்க வாய்ப்பிருக்கிறது.

சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையை விட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப் பட்டுள்ளது.

ஊதுபத்தி வெளியாகும் புகை, காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்தப்படும் போது, நாள் பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உருவாகக்கூடும் என தெரிவித்தது.

இருதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு நேரும். தொடர்ந்து ஊதுபத்தி உபயோகிக்கும் போது இதய நோய் உயிரிழப்பு 12 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் புகை, இரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஊதுபத்தி வாசத்தை குழந்தைகள் நுகர்வதும் ஆபத்தானது. குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் நுகரும் போது, கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஊதுபத்தியை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்னும் பட்சத்தில் குறைந்த நேரம் மட்டுமே உபயோகிப்பது நல்லது. நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது அவசியம் என்று அந்தப் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker