Latestமலேசியா

துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்; 3 துப்பாக்கி குண்டுகள் துளைத்து ஆடவர் காயம்!

பெட்டாலிங் ஜெயா,அக்.16- கோத்தா டாமான்சாரா, பெர்சியாரான் துரோப்பிக்கானாவிலுள்ள கடை ஒன்றிலிருந்து வெளியேறிய மாத்திரத்தில் அடையாளம் தெரியாத நபரால் ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தத்தில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.50 மணியளவில் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் முகமட் ஸானி சே டின் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான ஆடவருக்கு 35 வயது என்றும், அவரது வயிற்றுப் பகுதியை மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பதம் பாத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆடவரைச் சுட்டுவிட்டு வெண்ணிற காரில் தப்பியோடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீஸ் தற்போது களமிறங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், இதற்கு பின்னணியில் மேலும் சிலர் இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கின்றனர்.

சூடுபட்ட ஆடவர் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் 03-7966 2222 என்ற எண்ணில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker