Latestமலேசியா

70% கட்டணச் சலுகை! ஏர் ஆசியா வழங்குகிறது!

கோலாலம்பூர், அக்.16- மலிவு விலை விமானச் சேவையை வழங்கி வரும் ஏர் ஆசியா நிறுவனம், இன்று தொடங்கி அக்டோபர் 28-ஆம் தேதி வரை, தனது அனைத்து விமானச் சேவைக்கும் 70 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்குகிறது.
.
இன்று தொடங்கி, அடுத்தாண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரைக்குமான 70 விழுக்காடு விமானச் சேவையை பெற்றுக் கொள்ள விரும்பும் பயணிகள், airasia.com இணையப் பக்கம் வாயிலாகவும், கைத்தொலைபேசி ஆப் வாயிலாகவும், முன்பதிவுகளை செய்துக் கொள்ளலாம்.

ஏர் ஆசியா மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனங்கள், 130 இடங்களுக்கு விமானச் சேவையை வழங்குவதாக ஏர் ஆசியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் அமெண்டா வூ தெரிவித்துக் கொண்டார்.

“இந்தச் சலுகையை, ஏர் ஆசியா பிக் (BIG) பயணிகள் வெகுவாக அனுபவிக்கலாம். அவர்கள் இந்தக் கழிவை உடனடியாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நேரிடையாக எங்களின் அகப்பக்கம் மற்றும் மொபைல் ஆப் வாயிலாக முன்பதிவுகளை செய்துக் கொள்ளலாம்” என்று அவர் விவரித்தார்.

இந்தக் கழிவை பயன்படுத்திக் கொண்டு, கோலாலம்பூரிலிருந்து சாங்ஷா, தோக்கியோ, கொல்கத்தா, பாலி, புக்கேட், சியாம் ரீப், யங்கூன், மணிலா, சிங்கப்பூர், கோத்தா கினாபாலு மற்றும் இதர இடங்களுக்கு பயணிகள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker