Latestஇந்தியா

“என் பொண்டாட்டி என்னை கொல்லப் பார்க்கிறா” -தீக்குளிக்க முயன்ற கணவன்!

நெல்லை, அக்.16- “என் பொண்டாட்டி என்னைக் கொல்லப் பார்க்கிறா., அதை நான் சொன்னா யாருமே காதில போட்டுக்கல” என்று சொல்லியவாறே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாதானூத்து என்ற கிராமத்தில் முருகன் என்பவர் தனது மனைவி கவிதா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆனால், கவிதா ராஜாத்துக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்தப் பழக்கம் கள்ளக் காதலாக உருவெடுத்தது.

இருவரின் சமாச்சாரமும் முருகனுக்கு தெரிய வரவே, கவிதாவை கண்டித்துள்ளார். ஆனால் கவிதா அதை காதிலே போட்டுக் கொள்ளவில்லை. பலமுறை சொல்லிப் பார்த்தார். ஆனால் ஒன்றும் மாறவேயில்லை.

இதனால் இருவருக்கும் இடையே சண்டையாகப் போய் முடிந்தது. ஆகவே, முருகன் போலீசில் மனைவியின் கள்ளக் காதல் விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளார்.

மேலும் கள்ளக் காதலனுடன் சேர்ந்து தன்னுடைய மனைவி தன்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டி வருகிறார். ஆகவே தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் அப்புகாரில் முருகன் கேட்டிருந்தார்.

ஆனால், போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்புகார் தொடர்பாக அவருக்கு கொலை மிரட்டலும் வந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட அலுவலகத்துக்கு ஒரு மனுவுடன் வந்தார் முருகன்.

மனம் உடைந்த நிலையில் இருந்த முருகன், தன் மேல் மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

பின்னர் முருகனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கள்ளக் காதலுடன் சேர்ந்து தன் மனைவி தன்னைக் கொல்ல முயற்சிப்பதாகவும் அதிர்ஷ்வசமாக தாம் தப்பித்து வருவதாகவும் கூறி அழுதார்.

மேலும் தன்னைக் காப்பாற்றும்படி போலீசில் புகார் செய்தும் யாரும் கண்டு கொள்ளவேயில்லை. இதனால் தாம் மனம் உடைந்து போயிருப்பதாக முருகன் கூறினார். இதனிடையே அவரது புகாரை ஏற்று இதற்குத் தீர்வு காணும் படியும் முருகனுக்கு உரிய பாது காப்புத் தரும்படியும் ஆட்சியாளர் அலுவலகம் போலீசைக் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker