Latestஉலகம்

டிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி

வாஷிங்டன், அக்.17- அமெரிக்க நீதிமன்றத்தில் அதிபர் டிரம்ப் மீது ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

‘அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போது நான் வாய் திறக்கக்கூடாது என்பதற்காக எனக்கு டிரம்ப்பின் வழக்கறிஞர் எனக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் பணம் தந்தார்’ என அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு புகார் கூறினார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி இந்தப் பணத்தை ஸ்டார்மி டேனியல்சுக்கு தான் கொடுத்தது உண்மை தான் என டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் ஸ்டார்மி டேனியல்ஸ் கட்டவிழ்த்து விட்டுள்ள கட்டுக்கதை இது என்ற ரீதியில் டிரம்ப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.
இது தொடர்பாக டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ், நீதிமன்றத்தில் ஓர் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஜேக்ஸ் ஆட்டிரோ விசாரித்தார். அப்போது டிரம்ப் தரப்பில் வாதிடுகையில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வார்த்தைகள் அமெரிக்க அரசியல் மற்றும் மேடைச் சொற்பொழிவில் தொடர்புடைய வார்த்தைகள் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு டிரம்ப் மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் அவர் டிரம்ப் டுவிட்டரில் கூறியுள்ள வார்த்தைகளுக்கு அமெரிக்க அரசியல் சாசனம் பாதுகாப்பு அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் டிரம்ப் தரப்புக்கு ஏற்பட்ட சட்ட செலவுகளை நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker