Latestமலேசியா

 நஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்! –எம்ஏசிசி

கோலாலம்பூர், அக்.17- 1எம்டிபி நிதி மோசடி விவகாரம் தொடர்பில், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரிக்கப் படும் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், அது தொடர்பில் மேல் விவரங்களை வெளியிட அந்த ஆணையம் மறுத்துவிட்டது. 1எம்டிபி பண மோசடி விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று நஜிப் மீண்டும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு அழைக்கப் பட்டார். அவரிடம் சுமார் 6 மணி நேரத்திற்கு விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

கடந்த 3-ஆம் தேதியன்று, ஜாலான் துன் ரசாக்கிலுள்ள மெனாரா கெ.பி.ஜேவில் பண மோசடியை எதிர்க்கும் பிரிவு, நஜிப்பிடம் மூன்று மணி நேரத்திற்கு விசாரணையை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது, புக்கிட் அமானின் வர்த்தக குற்றங்கள் பிரிவும், நஜிப் மற்றும் அவரின் துணைவியார் டத்தீன்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரிடம் விசாரணையை நடத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பண மோசடி விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நஜிப் மீது 32 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன.

1எம்டிபி மற்றும் எஸ்.ஆர்.சி இன்டெர்நேஷனல் நிறுவனங்களுக்கு சொந்தமான ரிம.42 மில்லியனை மோசடி செய்துள்ளதாக, நஜிப் மீது மூன்று நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப் பட்டுள்ளன.

தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை, ஜூலை மாதம் 4-ஆம் தேதியன்று, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து, நஜிப் மேல் விசாரணை கோரியுள்ளார்.

நான்காண்டுகளுக்கு முன்னர், எஸ்.ஆர்.சி நிறுவனத்தை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகள் வாயிலாக, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ரிம.42 மில்லியனை, தனது இரு சொந்த வங்கிகளுக்கு பண பரிவர்த்தனை செய்துக் கொண்டதாக நஜிப் மீது மூன்று குற்றச்சாட்டுகள், கடந்த ஆகஸ்டு மாதம் சுமத்தப் பட்டன.

2001-ஆம் ஆண்டின் பண மோசடி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதிச் சட்டத்தின் கீழ் 21 குற்றச்சாட்டுகளும், எம்.ஏ.சி.சி சட்டத்தின் 23 (1) பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளும் நஜிப் மீது சுமத்தப் பட்டுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker