Latestமலேசியா

‘வளைவு பால’ திட்டம்; இப்போதைக்கு இயலாது!! –அஸ்மின் அலி

கோலாலம்பூர், அக்.17- ஜொகூர் மாநிலத்தையும் சிங்கப்பூரையும் இணைக்கும் ‘வளைவுப் பாலத்தை’ அமைக்கத் தேவையான பொருளாதார வசதி அரசாங்கத்திற்கு இப்போது இல்லை என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இன்று பதிலளித்தார்.’

இரு பகுதிகளையும் இணைக்கும் வளைவு பாலத் திட்டத்திற்கு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ‘புத்துயிர்’ கொடுக்கும் என்று அண்மையில் ஜொகூர் மாநில மந்திரி புசார் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து கருத்துரைத்த போது, அந்தப் பாலம் தொடர்பிலான திட்டம் புத்துயிர் பெற வேண்டும் என்பது டத்தோ ஒஸ்மான் சாஃபியானின் தனிப்பட்ட கருத்து என அஸ்மின் சுட்டிக் காட்டினார்.

“அத்திட்டம் குறித்து இப்போதைய பொருளாதார சூழ்நிலையில் எவ்வித முடிவையும் எடுக்க முடியாது. அத்திட்டத்தை செயல்படுத்த சரியான காலம் இதுவல்ல” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்தக் வளைவுப் பாலத்தை அமைக்க பெருமளவில் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், தற்போதைய நிலைமையில் மெகா திட்டங்களை செயல்படுத்தும் எண்ணம் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு இல்லை என்பதையும் அஸ்மின் தெளிவு படுத்தினார்.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், நாட்டின் 4-ஆவது பிரதமராக பொறுப்பேற்றிருந்த தருவாயில், அந்த வளைவுப் பாலம் அமைக்கும் திட்டத்தை பரிந்துரை செய்திருந்தார். ஆனால், அவர் தனது பதவியை துறந்த பின்னர், நாட்டின் 5-ஆவது பிரதமரான துன் அப்துல்லா படாவி அந்த பரிந்துரையை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker