Latestமலேசியா

விமான நிலையங்களின் ‘VIP’ பாதைகளில் தீவிர கண்காணிப்பு!-

கோலாலம்பூர்,அக்.17- நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விஐபிகளுக்கான பாதையில் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்ர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

விஐபிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள பிரேத்தியேக பாதைகளிலும் அறைகளிலும் தான் சட்டவிரோத நடவடிக்கைகள் குறிப்பாக கள்ளப்பணம், போதைப்பொருள் கடத்தல் நடக்கும் ஆபத்து அதிகமிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, விஐபி நடமாடும் சிறப்பு பாதைகளிலும், அவர்களின் காத்திருப்பு அறைகளிலும் சுங்கத் துறை, குடிநுழைவுத் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படவிருப்பதாக அவர் சொன்னார்.

யாராக இருந்தாலும் அவர்களை சோதனைக்கு உட்படுத்துவது அந்த அதிகாரிகளின் கடமையாகும். இதன் மூலம் விஐபி பாதைகளிலும் அறைகளிலும் காணப்படும் பலவீனங்களைத் தவிர்க்க முடியும் என அந்தோணி நம்பிக்கை தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker