Latestஇந்தியா

இயக்குனர் லீனா பாலியல் புகார்: நிருபித்தால் தூக்கில் தொங்கத் தயார்! -சுசி. கணேசன்

சென்னை, அக்.18- ஆண்களுக்கும் கற்பு உண்டு. ஒரேயொரு பொய்யால் பெண் இயக்குனர் லீனா மணிமேகலை என் கற்பை சூறையாடிவிட்டார் என்று ‘திருட்டுப்பயலே’ திரைப்பட இயக்குனர் சுசி கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. வைரமுத்து, ராதாரவி, நானா படேகர் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்கள் மீது எழுந்து வருகிறது.

இந்நிலையில் பெண் கவிஞரும் இயக்குனரும் நடிகையுமான லீனா மணிமேகலை, தான் 2005-இல் தொகுப்பாளினியாக இருந்த போது தன்னிடம் காரில் தவறாக நடக்க முயன்றார் என்றும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி தான் தப்பித்ததாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுசி கணேசன் நீண்ட ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் கையில், கத்தி வைத்திருத்த நீங்கள் அப்போதே நெஞ்சில்
இறக்காமல் ஏன் இருந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்கள் சொன்ன பொய்யால் என் கற்பு பறிபோய் விட்டது. ஆணுக்கும் கற்பு இருக்கிறது. இதற்கு மன்னிப்பு கோராவிட்டால் நான் மானநஷ்ட ஈடு வழக்கு போடுவேன்.

என்னிடம் ஆதாரம் இருக்கிறது. உங்கள் புகார் உண்மை என்று நிரூபணமானால் நான் அங்கேயே தூக்கில் தொங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker