Latestசினிமா

சின்மயின் அம்மா செய்த வேலையால் தெறிக்க ஓடிய பிரபலங்கள்

சென்னை அக். 18- சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றின் போது தனக்கு கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதே வேளையில், இந்நிகழ்ச்சியின் போது சின்மயின் அம்மா செய்த காரியத்தால் ஏற்பட்ட தர்ம சங்கடங்களும் அம்பலத்திற்கு வந்துள்ளன.

கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் மீது பாடகி சின்மயி, கூறிய பாலியல் புகார் தொடர்பான பிரச்சனை இப்போது தமிழகத்தில் பெரிய பூதகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில் அந்த இசை கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் என்பவர், சின்மயி அம்மா பற்றிய ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டில் சின்மயின் அம்மா ‘ஒயின்’ குடித்து ஆட்டம் போட்ட ரகளையால் தான் அங்கு பெரிய பிரச்சனையே வந்ததாம். அங்கிருந்த எல்லோரும் இதென்ன இது என்று தலையில் அடித்துக் கொண்டனராம்.

அத்துடன் அங்கு வந்திருந்த பாடகர் மாணிக்க விநாயகம் உள்பட சில பிரபலங்கள், சின்மயி அம்மாவின் ரகளை ஆட்டத்தால் தலை தெறித்து ஓடினாராம் இனியவனின் இந்தக் கருத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker