Latestமலேசியா

சைபர் ஜெயாவில் அதிர்ச்சி: பெண்ணை மோதி இழுத்துச் சென்ற கார்!

கோலாலம்பூர், அக்.18- சைபர் ஜெயாவிலுள்ள ஷாப்ட்ஸ்பரி சதுக்கத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெண்மணியின் மீது வேகமாக வந்த கார் மோதியதோடு தெருவில் சில மீட்டர் தூரம் அவரை இழுத்துச் சென்ற அதிர்ச்சிக் காட்சியைக் கொண்ட கண்காணிப்பு கேமிரா காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பாகி இருக்கிறது.

சைபர்ஜெயா சமூக பேஸ்புக் பக்கத்தில் இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெண், நேற்றிரவு 7.35 மணியளவில் சாலையைக் கடக்கும் போது இந்த விபத்து நடந்திருப்பதை அங்கிருந்த சிசிடிவி கேமிரா பதிவில் தெரிய வந்தது.

அந்தக் கார் மோதிய வேகத்தில் அந்தப் பெண்ணை சிறிது தூரம் இழுத்துச் சென்றதோடு அவர் பின்னர் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டதாக அந்தப் பதிவில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது

இது தொடர்பான ‘கிரீன்ஸ்ஷாட்’ படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவாளர் ஒருவர் தந்துள்ள தகவலின் படி, காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றாலும் அவர் சுயநினைவிழந்த நிலையிலே இன்று காலை இறந்து விட்டதாக தெரிய வருகிறது.

இந்தக் காரை ஓட்டியவர் ஒரு பாகிஸ்தானியர் என்றும் இப்பகுதியில் பலரும் முறையாக சாலை விதிமுறைகளை கடைப் பிடிப்பதில்லை என்றும் சைபர் ஜெயா சமூக பேஸ்புக் பதிவு ஒன்று தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker