Latestமலேசியா

தஞ்ஜோங் மாலிம் நிலையத்திற்கருகே ரயில்கள் மோதல்!

ஈப்போ,அக்.18- இன்று காலையில் தங்ஜோங் மாலிம் ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு ரயில் ஒன்றும் KTMB கமூயூட்டர் ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து வடக்குப் பகுதிகளுக்கான ETS ரயில் சேவைகளில் சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, தங்ஜோங் மாலிம்- கேப்போங் வரைக்குமான KTMB கமூயூட்டர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விபத்து இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்ததாக KTMB-இன் பேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.எனினும், இந்தச் சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மேல் விவரங்களுக்கு, 03-22671200 என்ற எண்ணில் KTMB நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது அந்நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தின் வாயிலாகவும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker