Latestஇந்தியா

மக்களின் விருப்பத்தை ஏற்று மஇகா தேர்தலில் குதித்தேன் – டான்ஶ்ரீ இராமசாமி (VIDEO)

ஷாஆலாம், அக்.18 – நாடு தழுவிய அளவில் மஇகா கிளைத் தலைவர்கள் பலரின் வேண்டுகோளை ஏற்று, சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கிலேயே மஇகா தேசியத் துணைத்தலைவர் பதவிக்கு தாம் போட்டியிட்டு வருவதாக முன்னாள் பேரா மஇகா தலைவரும் தொழிலதிபருமான டான்ஶ்ரீ எம்.இராமசாமி தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டு காலமாக கட்சியில் தாம் இருந்து வந்தாலும் கட்சியிடமிருந்து தான் எந்த பலனையும் எதிர்பார்த்தது இல்லை. கட்சியின் நலனுக்காக, தாம் தம்மில் முடிந்ததை செய்து வந்திருப்பதாக கூறினார் அவர்.

கடந்த மூன்று மாதங்காலமாக கட்சியில் பல்வேறு கிளைகளின் தலைவர் என்னைச் சந்தித்து பேசினார். அவர்களின் எதிர்பார்ப்பெல்லாம் கட்சியில் மாற்றம் தேவை. சமுதாயத்தில் மறுமலர்ச்சி தேவை என்பதுதான். அந்த அடிப்படையில் மஇகாவுக்கு ஒரு புதிய உந்துதலை ஏற்படுத்தவே தேசிய துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று அவர் சொன்னார்.

ஷஆலாம் டிஎஸார் மாநாட்டு மண்டபத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் மஇகாவினர் மத்தியில் டான்ஶ்ரீ இராமசாமி உரையாற்றினார். அவரது உரையின் சாராம்சத்தை வணக்கம் மலேசியா காணொளியில் காணலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker