Latestமலேசியா

ரிம.16.6 பில்லியன் செலவில் எல்.ஆர்.டி-3 பணிகள் தொடரும்!

கோலாலம்பூர், அக்.18- முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்ட நாட்டின் மூன்றாவது எல்.ஆர்.டி இலகு ரயில் திட்டத்தை பூர்த்தி செய்ய பக்காத்தான் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, நிலங்களை கையகப் படுத்துதல், கட்டுமானப் பணிக்கான வட்டி, மற்றும் இதர செலவுகளுக்கு ரிம.16.6 பில்லியன் செலவிடப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியன்று, எம்.ஆர்.சி.பி ஜோர்ஜ் கெண்ட் நிறுவனத்திற்கு பிரசரானா மலேசியா நிறுவனம் கடிதம் ஒன்றின் வாயிலாக மூன்றாவது எல்.ஆர்.டி இலகு ரயில் கட்டுமானத் திட்டம் தொடரப் படுவதாக தெரிவித்தது என்று எம்.ஆர்.சி.பி நிறுவனம் இன்று கூறியது.

நிலையான ஒப்பந்த ஆட்சி விலையை நிர்ணயிக்கும் பொருட்டு, அத்திட்டத்தின் செயல்பாட்டு திட்டம் மறுவடிவமைக்கப் படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

“அத்திட்டம் தொடர்பில் பொருள் மேம்பாடு காணப்படுவதால், அது குறித்த மேல் விவரங்களை புர்சா மலேசியா பங்குச் சந்தையிடம் எம்.ஆர்.சி.பி நிறுவனம் அறிவிக்கும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker