Latestமலேசியா

ரிம.700 மில்லியன் நஷ்ட ஈடு கோரி நஜிப்-ரோஸ்மா மீது வழக்கு!

கோலாலம்பூர், அக்.18- பல்வேறான சட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்  மற்றும் அவரின் துணைவியார் டத்தீன்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரிடம் தீபக் ஜாய்கிஷண் என்ற கம்பள விரிப்பு வணிகர்  இரு வழக்குகளை சிவில் தொடுத்துள்ளார்.

கிள்ளான் ஜாலான் புக்கிட் ராஜாவிலுள்ள தனக்கு சொந்தமான மூன்று ) நிலங்கள் தொடர்பில் சதித் திட்டம் தீட்டி, தனது முடிவை மாற்றும் வகையில் பல்வேறான சிரமங்களை கொடுத்ததாக நஜிப் மற்றும் ரோஸ்மா மற்றும் இரு நிறுவனங்கள் மீது தீபக் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று மலேசியாகினி தெரிவித்துள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டில் ‘அவான் மெகா’ நிறுவனம் குறிப்பிடப் பட்ட அந்த நிலத்தை தனியார் மயமாக்கியது. தனியார் மயமாக்கப்பட்ட அந்த நிலத்தை அந்நிறுவனம் அஸ்தா சாங்கே நிறுவனத்திற்கு விற்க முன்வந்தது. அஸ்தா சாங்கே நிறுவனத்தின் பெருன்பான்மை பங்குதாரர் தீபக் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராண்டுகளுக்குப் பின்னர், அந்த நிலத்தை கையகப் படுத்தும் ஒப்பந்தத்தை அவான் மெகா நிறுவனம் மற்றும் அஸ்தா சாங்கே நிறுவனம் கையெழுத்திட்டன.

இதனிடையில், கடந்த 2010-ஆம் ஆண்டில், அதே நிலத்தை குப்பி யுனீப் (GuppyUnip) நிறுவனத்திடம் விற்பதற்காக அவான் மெகா நிறுவனத்தின் உரிமையாளரான சிலாங்கூர் அம்னோ கட்சியின் மகளிர் தலைவர் ராஜா ரோபியா ராஜா அப்துல்லா முயற்சித்துள்ளார்.

அதை அறிந்த தீபக், அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக நீதிமன்ற வழக்கை தொடர்ந்தார். ஆனால், சிலர் தனக்கு தேவையில்லா சிரமங்களை கொடுத்ததால், தாம் அந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டதாகவும், அதனால் தமக்கு பல்வேறான நஷ்டங்கள் ஏற்பட்டதாக தீபக் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, ஆயுதப்படை நிதி வாரியத்தின் கீழ், பவுஸ்டேட் (Boustead) நிறுவனத்தின் கிளை நிறுவனமான பக்தி வீரா (Bakti Wira) நிறுவனத்தின் பெயரின் கீழ், நஜிப் மற்றும் ரோஸ்மா தம்பதியினர் அஸ்தா சாங்கே நிறுவனத்தின் 80 விழுக்காடு பங்குகளை வாங்கி விட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker