Latestவாழ்க்கை

வாழைத்தண்டு! உங்களை ஆரோக்கியமாக வாழவைக்கும்!

கோலாலம்பூர், அக்.18- ஆரோக்கியம் நிறைந்த காய்கறி வகைகளில் வாழைத் தண்டும் ஒன்று என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனாலும் இதில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியாது.

ஆரோக்கியம் என்று தெரிந்தும் கூட வாழைத்தண்டு அதிகமாகத் துவர்க்கும் தன்மை கொண்டதால் நாம் அதை சாப்பிடுவதில்லை. ஆனால் துவர்ப்பை கொஞ்சம் பொறுத்துக் கொண்டு வாழைத்தண்டு சாறினைக் குடித்தால் அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.

வாழைத்தண்டு சாற்றினையோ அல்லது பொரியலாகவோ, கூட்டாகவோ உணவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வடிவில் எடுத்துக்கொண்டே வந்தீர்கள் என்றால் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகள் வெளியேறும் உடல் புத்துணர்ச்சியாகவும் லேசாகவும் மாறிவிடும்.

வாழைத்தண்டு சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரகக் கற்கள் கரைந்து விடும் அல்லது சிறுநீரில் வெளியேறிவிடும். . சிலர் துவர்ப்பு அதிகம் இருப்பதால் சிறிது உப்புச் சேர்த்து கொள்வார்கள்.

அப்படி குடிக்கும் வாழைத்தண்டு சாற்றில் இரண்டு பச்சை ஏலக்காயை தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படிக் குடிக்கும் போது கற்கள் உள்ளிருக்கும் போதும் வெளியேறும் போது ஏற்படுகின்ற வலி கட்டுப்படும்.

இதே போல் வாழைத்தண்டுச் சாற்றில் சிறிது எலுமிச்சம் சாறு சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கற்கள் தோன்றவே தோன்றாது. எப்படியென்று தெரியுமா? வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் மற்றும் எலுமிச்சையில் உள்ள ‘சிட்ரிக்’ அமிலம் இரண்டும் சேர்ந்து பொட்டாசியம் சிட்ரேட்டாக மாறிவிடும். இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.

உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு வழிகளைப்  பின்பற்றுவார்கள். ஆனால் வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் பலன் தரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker