Latestமலேசியா

4 எழுத்து கெட்ட வார்த்தையை பயன்படுத்தியதற்காக பூங் மொக்தார் மன்னிப்பு கேட்டார்!

கோலாலம்பூர், அக்.18- நாடாளுமன்றத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான்கெழுத்து கெட்ட வார்த்தையால் திட்டிய டத்தோஶ்ரீ பூங் மொக்தார் ரடின் தனது செயல் குறித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படாது என்று தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில், நான்கெழுத்து கெட்ட வார்த்தையை பயன்படுத்திய பூங் மொக்தாரின் சிறப்பு சலுகைகள், மற்றும் அவரின் உரிமைகளை பறிக்க ஒழுக்காற்று குழு முடிவெடுத்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால், நாடாளுமன்றத்தில் தமது செயல் குறித்து பூங் மொக்தார் மன்னிப்பு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவிடம் தாம் சமர்ப்பித்த மசோதாவை வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ஜுரைடா கமாருடின் கைவிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விற்பனை வரி விவாதத்தின் போது, அந்த நான்கெழுத்து கெட்ட வார்த்தையை பயன்படுத்தியது தவறு என்பதை தாம் உணர்ந்து விட்டதாக பூங் மொக்தார் தெரிவித்தார்.

“இது போன்ற தவறு மீண்டும் நடைபெறாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பெண் உறுப்பினர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் சொன்னார்.

“தனது தவறை உணர்ந்து விட்டதாக பூங் மொக்தார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதனால், உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவிடம் நான் சமர்ப்பித்த மசோதாவை நான் திரும்பப் பெற்று கொள்கிறேன்” என்று ஜுரைடா கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker