Latestமலேசியா

பெண்ணைக் காரில் மோதிய கோரம்: ஒரு பெண் உள்பட 4 மாணவர்கள் கைது!

சிப்பாங், அக்.19- நேற்று சைபர் ஜெயாவில் சாலைக் கடந்து சென்ற ஒரு பெண்ணை காரினால் மோதித் தள்ளி விட்டு ஓட்டுனர் தப்பித்து ஓட்டிய சம்பவத்தில் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 3 ஆசாமிகள் மற்றும் ஒரு மலேசிய பெண்மணி உள்பட நால்வரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஶ்ரீகெம்பாங்கிலுள்ள புசாட் பண்டார் புத்ரா பெர்மாயில், 22 வயதுடைய ஏமான் நாட்டைச் சேர்ந்த நபரை போலிசார் நேற்று நள்ளிரவில் கைது செய்ததாக சிப்பாங் ஓசிபிடி அப்துல் அஸீஸ் அலி தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் லிபியாவைச் சேர்ந்த 20 வயது மற்றும் 24 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்காவது நபராக 34 வயதுடைய பெண்மணி ஒருவர் சைபர் ஜெயாவில் கைது செய்யப்பட்டார். இவர் சபாவைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவருமே சைபர் ஜெயாவிலுள்ள அனைத்துலக பல்கலைக் கழகம் ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

சைபர் ஜெயாவிலுள்ள ஷாப்ட்ஸ்பரி சதுக்கத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெண்மணியின் மீது வேகமாக வந்த கார் மோதியதோடு தெருவில் சில மீட்டர் தூரம் அவரை இழுத்துச் சென்றது.

அதிர்ச்சிக் காட்சியைக் கொண்ட கண்காணிப்பு கேமிரா காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சைபர்ஜெயா சமூக பேஸ்புக் பக்கத்தில் இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெண், நேற்று முன்தின இரவு 7.35 மணியளவில் சாலையைக் கடக்கும் போது இந்த விபத்து நடந்திருப்பதை அங்கிருந்த சிசிடிவி கேமிரா பதிவில் தெரிய வந்தது.

அந்தக் கார் மோதிய வேகத்தில் வான் அமிரா வான் அலியாஸ் என்ற அந்தப் பெண்ணைச் சிறிது தூரம் இழுத்துச் சென்றதோடு அவர் பின்னர் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டதாக அந்தப் பதிவில் இருந்து க தெரியவந்தது.

காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றாலும் அவர் சுயநினைவிழந்த நிலையிலே இறந்து விட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர புலன் விசாரணையை மேற்கொண்ட போலீசார் இந்த நால்வரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவன், அந்தக் காரை தான் ஓட்டியதை ஒப்புக் கொண்டான் என்று சிப்பாங் ஓசிபிடி அப்துல் அஸீஸ் அலி தெரிவித்தார். 1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) ஆவது பிரிவின் கீழ் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தி மரணத்தை விளைவித்த அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker