Latestமலேசியா

4 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தாயின் கோரச் செயல்!

கோத்தா பெலூட், அக்.19- மன உளைச்சல் ஒருவரை பெற்றக் குழந்தைகளையே கொலைச் செய்யும் அளவிற்குத் தூண்டுமா? மந்தானானித் தீவில் மனஉளைச்சலுக்கு ஆளான பெண்மணி தனது நான்கு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்யத் துணிந்ததில் எட்டு மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற மூன்று பிள்ளைகள் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு நிகழ்ந்துள்ளது. தனது தாயின் மூர்க்கத்தனமான செயலால் ஜெர்ரி யோஹனெஸ் என்ற அந்தப் பச்சிளம் குழந்தையின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது.

மாறாக, அந்தக் குழந்தையின் சகோதரிகளான 8 வயது நூருல் ஹனிசா, 7 வயது மெலாத்தி, சகோதரரான 5 வயது ஜெஹன் ஆகியோருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தனது பிள்ளைகளை கத்தியால் குத்திய பிறகு அந்த 30 வயது பெண் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்திருக்கிறாள். எனினும், அந்தப் பெண்ணை அவளது கணவர் தடுத்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தின்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் ரத்தக் கறையுடன் ஆட்களை உதவிக் கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார்கள். அவரை அணுகி என்னவென்று கேட்டது அவர் எல்லா உண்மையையும் சொல்லியிருக்கிறார்.

பின்னர் இறந்த குழந்தையும் மற்ற பிள்ளைகளும் உடனடியாக விரைவு படகு மூலம் கோத்தா பெலூட் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சபா போலீஸ் ஆணையர் டத்தோ ஒமார் மம்மா தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker