Latestமலேசியா

சீனாவில் ஜோ லோவை கண்டுபிடிக்க உதவத் தயார் – ஹிசாமுடின்

கோலாலம்பூர், அக். 22- தற்போது மலேசியாவினால் தேடப்படும் தொழிலதிபர் ஜோ லோவ், சீனாவில் இருப்பரேயானால், அவரைக் கண்டுபிடிப்பதில் மலேசிய அரசாங்கத்திற்கு தாம் உதவத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிசாமுடின் ஹுசைன் தெரிவித்தார்.

1எம்டிபி நிதி விவகாரத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமானால் ஜோ லோவை கண்டுபிடித்து இங்கு கொண்டு வரவேண்டியது அவசியம் என்று முன்னாள் தற்காப்பு அமைச்சரான ஹிசாமுடின் சொன்னார்.

தேடப்படும் ஜோ லோவ் சீனாவில் இருப்பதாக சொல்கிறார்கள். அவர் நீதியை எதிர்கொள்ளவேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். அவர் இங்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும் என்றார் அவர்.

ஜோ லோவ் சீனாவில் தான் இருக்கிறார் என்றால், கடந்த அரசாங்கத்தில் இருந்த காலத்தில் சீனாவில் தமக்குள்ள தொடர்புகள் மூலம் ஜோ லோவை நீதியின் முன்நிறுத்த தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

1எம்டிபி விவகாரத்தில் ஜோ லோவுக்கு தொடர்பு இருக்கிறது என்பதை இந்த நாட்டில் யாரும் மறுக்க முடியாது. தன் மீதான குற்றச்சாட்டைக் களைய வேண்டுமானால் ஜோ லோவ் நாடு திரும்பி குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது சிறப்புப் பணிகளுக்கான முன்னாள் அமைச்சருமான ஹிசாமுடின் குறிப்பிட்டார்.
,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker