Latestமலேசியா

ஜோ லோவின் சகோதரிக்கு உதவாததால் தூதர் இளங்கோவை ஓரங்கட்டினார் நஜிப்?

கோலாலம்பூர்,அக்.22- சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவின் உடன்பிறந்த சகோதரியும் அவரது கணவரும் சிங்கப்பூரில் பிடிபட்டபோது அவர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்ட விவகாரத்திற்கு உதவாததால் அப்போது சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக இருந்த இளங்கோ கருப்பண்ணனின் பதவி பறிக்கப்பட்டு அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

ஜோ லோவின் சகோதரி லோ மே லினும் அவரது கணவரும் 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்க உகந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்போதைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தனது உதவியாளர் மூலம் சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக இருந்த இளங்கோவுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், இளங்கோ அந்த விவகாரத்தில் உதவ முன்வரவில்லை.

அதனால், இளங்கோவின் தூதர் பதவி பறிக்கப்பட்டதாக நஜிப் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. எனினும், தம் மீதான அக்குற்றச்சாட்டை நஜிப் மறுத்து வருகிறார். அது மட்டுமின்றி, ஜோ லோவை தற்காக்க தனக்கு எந்தக் காரணமும் இல்லை. ஜோ லோ அரபுத் தரப்பின் பிரதிநிதி என நஜிப் கூறுகிறார்.

மேலும், இளங்கோ கருப்பண்ணன் தற்போது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் விஸ்மா புத்ராவில் பணியாற்றி வருவதாக நஜிப் குறிப்பிட்டார்.

இளங்கோ, 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கான மலேசியாத் தூதராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker