Latestமலேசியா

தேமு அறிவித்திருந்த மானியங்கள் எல்லாமும் இந்திய சமுதாயத்தை சென்றடையவில்லை!- வேதா

கோலாலம்பூர்,அக்.22- இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம், ‘செடிக்’ எனப்படும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் மூலமாக வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒதுக்கீடு மக்களைச் சென்றடைந்ததா இல்லையா என்பதைக் கண்டறிய, செடிக்கை கணக்கறிக்கையை ஆய்வு செய்யுமாறு பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தி தேசிய கணக்காய்வுத் துறையைப் பணித்த்துள்ளார்.

ஏனெனில், தேசிய முன்னணி அறிவித்திருந்த அனைத்து மானியமும் இந்திய மக்களைச் சென்றடையவில்லை என அவர் இன்றைய மக்களவையில் கூறினார்.

“தேசிய முன்னணி இந்திய மக்களுக்காக புளுப்பிரிண்ட் திட்டத்தை வைத்திருந்தது. பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அறிவித்திருந்தது. ஆனால், செடிக் அமைப்பின் மூலம் அந்த மானியங்கள் முறையாக மக்களைச் சென்றடையவில்லை. அதனால், செடிக் கணக்கறியை பக்காத்தான் ஹராப்பான் ஆய்வு செய்யவிருக்கிறது” என்றாரவர்.

மக்களவையில், கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா உதவித் தலைவருமான டத்தோ சி.சிவராஜ் தேசிய முன்னணியின் மலேசியன் இந்தியர் புளுப்பிரிண்ட் திட்டத்தை பக்காத்தான் ஹராப்பான் தொடருமா என்று கேள்வி எழுப்பியதை அடுத்து அமைச்சர் வேதமூர்த்தி இவ்வாறு பதிலளித்தார்.

மேலும், இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் B40 வர்கத்தினருக்கு பக்காத்தான் ஹராப்பான் அரசு பலன் தரும் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தபோது, இந்தியர்களின் மேம்பாட்டுக்காக செடிக்கிற்கு 50 மில்லியன் ரிங்கிட், தெக்கூனுக்கு 50 மில்லியன் ரிங்கிட் , தமிழ்ப்பள்ளிகளுக்காக 50 மில்லியன் ரிங்கிட் மான்யம் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker