Latestமலேசியா

‘அகதிகளுக்கு தோட்டப்புற வேலைகள் ‘ -குலசேகரன்

கோலாலம்பூர், அக்.23 – அகதிகளாக இருந்து வருபவர்களுக்கு தோட்டத் தொழில்களில் வேலை தரவும் அவர்கள், அங்கேயே தங்குவதற்கும் உதவுவது குறித்தும் மனித வள அமைச்சுஆராய்வதாக அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

தோட்டத் தொழில் துறையில் உள்ளவர்களுடன் தாம் இது குறித்து பேசியிருப்பதாகவும் அங்கேயே தங்கி வேலை செய்ய 5,000 பேரை ஈடுபடுத்துவது குறித்து பேசியதாகவும் அவர் சொன்னார்.

இவ்வாறு செய்வதால் அகதிகள் மருத்துவ வசதிகளைப் பெற முடியும். மேலும் அவர்களின் பிள்ளைகள் கல்வி வாய்ப்பைப் பெற முடியும். சமுதாயத்தில் ஓர் அங்கமாக அவர்கள் மாற முடியும். எனவே, இந்தத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அகதிகள் வேலை வாய்ப்பைப் பெற அமைச்சு பல்வேறு வழிவகைகளை ஆராய்ந்து வருகிறது. அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லாததால் பிரச்சனைகள் உருவாகி இருப்பதாக அவர் விளக்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker