Latestஉலகம்

ஒருவரின் வயிற்றில் 122 ஆணிகள்! மருத்துவர்கள் அதிர்ச்சி

அட்டிஸ் அபாபா, அக். 23- எத்தியோப்பியர் ஒருவர் வயிற்றில் 122 இரும்பு ஆணிகள் இருந்தது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எத்தியோப்பிய தலைநகரான அட்டிஸ் அபாபாவைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் 10 செண்டி மீட்டர் நீளமுள்ள 122 ஆணிகள், நான்கு பின்கள், பல் குத்தும் குச்சிகள் மற்றும் உடைந்த கண்ணாடித் துண்டுகளை விழுங்கி இருந்தது மருத்துவச் சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டது.

இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள், அந்த ஆணிகள் உள்ளிட்ட பொருட்களை அவரது வயிற்றிலிருந்து அகற்றினர்.

அவர் எப்படி இந்த ஆணிகளை விழுங்கினார் என்பது அதிசயமாக இருக்கிறது. ஒரு வேளை தண்ணீர் குடித்து குடித்து ஆணிகளை விழுங்கியிருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதனால் தான் ஆணிகள் அவரது வயிற்றைக் கிழிக்கவில்லை. அவ்வாறு கிழிந்திருந்தால் அவருக்கு மோசமான நோய்த்தொற்று ஏற்பட்டு அதனால் மரணம் கூட ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker