Latestவிளையாட்டு

“கற்பழிப்பு வழக்கு: நான் ஜெயிப்பேன்”-ரொனால்டோ

லண்டன், அக்.23- அமெரிக்கப் பெண் ஒருவர் தம் மீது சுமத்தியிருக்கும் கற்பழிப்புக் குற்றச்சாட்டில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியும் என்று பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நம்பிக்கை தெரிவித்தார்.

‘எனது வழக்கறிஞர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். உண்மை ஒருநாள் வெளிவரும்’ என்று செய்தியாளர்களிடம் பேசிய போது ஜூவெண்டஸ் குழுவின் கோல் மன்னனான ரொனால்டோ சொன்னார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் லாஸ் வெகாஸ் நகரில் தன்னை ரொனால்டோ கற்பழித்ததாக காத்ரின் மயோர்க்கா என்ற பெண் அண்மையில்போலீஸ் புகார் செய்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை 33 வயதுடைய ரொனால்டோ மறுத்தார்.

சாம்பியன் லீக் போட்டியில் இன்று ஜூவெண்டஸ் குழுவுக்கு எதிராக மன்செஸ்ட்டர் யுனைடெட் குழு விளையாடவிருக்கிறது. இப்போட்டிக்காக வந்துள்ள ரொனால்டோ செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த விவகாரத்தில் கற்பழிப்பு எதுவும் இல்லை. உண்மையான சூழல் குறித்து நான் பொய் சொல்லப் போவதில்லை . இந்த வழக்கில் நான் ஜெயிக்க முடியும் என்று எனது வழக்கறிஞர்கள் நம்பிக்கை சொன்னார்கள் என்றார் ரொனால்டோ.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker