Latestமலேசியா

குருவி என நினைத்து தவறுதலாக நண்பரை சுட்ட நபர்!

சீபு,அக்.23- பறவை என நினைத்து நண்பரையே சுட்டுத் தள்ளிய துயரச் சம்பவம் காப்பிட் என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது. தனது நண்பரை தவறுதலாக சுட்டுவிட்டதாக அந்த 30 வயது நபரே போலீசில் சரணடைந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில், இரு நண்பர்கள் வேட்டையாடுவதற்காக படகேறி லூபூக் நபாவ் என்ற காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்தனர். அங்குச் சென்றதும் இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சென்றுள்ளனர்.

அச்சமயத்தில், ஏதோவொரு நிழல் கண்ணுக்குப் புலப்படவும் அதனைப் பறவை என்று நினைத்து அந்த நண்பர்களில் ஒருவரான அந்த நபர் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டிருக்கிறார். சூடு பட்ட 29 வயது எட்வின் காடிங்கின் கதறல் சத்தம் கேட்கவும்தான் தான் சுட்டது பறவையை அல்ல; தனது நண்பனை என அந்த நபர் அறிந்திருக்கிறார்.

உயிரிழந்த எட்வின்ன் உடல் சவப்பரிசோதனைக்காக காப்பிட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதே சமயம், கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட நபரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker