Latestமலேசியா

பேராவில் இடைவிடாத மழை: வீட்டுத் தரைகளில் விரிசல்!

ஈப்போ,அக்.23- பேராக்கில் இடைவிடாது பெய்யும் மழையின் காரணமாக பல இடங்களில் மண்சரிவும் வீட்டுத் தரைகளில் பிளவும் ஏற்பட்டுள்ளது.

சிம்பாங் பூலாய் அருகேயுள்ள கம்போங் பாவோங் என்ற பூர்வக் குடியினர் வாழும் பகுதியில் உள்ள சில வீடுகளில் தரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு மீட்புத் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும், மாலை மணி 3 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.

இதனிடையே, கோப்பெங்கில் நில அரிப்பு ஏற்பட்டு விளக்கு கம்பங்கள் சரிந்து விழுந்தன. இச்சம்பவனம் மாலை 3.50 மணிக்கு லாவான் கூடாவிலுள்ள ஜாலான் டேசா சாஹாயா 1-வில் நிகழ்ந்தது.

அங்கு கண்காணிப்பு பணிகள் தொடர்கின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker