Latestவிளையாட்டு

‘மன்.யுனை. குழுவை விட்டு நான் போகவே மாட்டேன்!’ -நிர்வாகி மொரினோ

லண்டன், அக்,23 – ‘நான் கடைசி வரையில், அதாவது என் ஒப்பந்தம் முடியும் வரையில் மென்செஸ்ட்டர் யுனைடெட் கிளப்பில் தான் இருப்பேன்” என்று அதன் நிர்வாகி ஜோஸ் மொரினோ கூறினார்.

பிரிமியர் லீக்கில் மன்.யுனை. குழு தொடர்ந்து சரிவுநிலையில் இருந்து வருகிறது. இப்போது புள்ளிப் பட்டியலில் 10-ஆவது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, மரினோ, குழு நிர்வாகிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 55 வயதுடைய போர்ச்சுக்கீசியரான மொரினோ, 2020-ஆம் ஆண்டு வரையில் மன்.யுனை குழுவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ” நான் மன்.யுனை குழுவில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். தொடர்ந்து குழுவில் இருந்து வருவேன்” என்றார் அவர்.

இதனிடையே ரியல் மாட்ரிக் குழு ஸ்பெயின் லீக்கா போட்டியில் தொடர்ச்சியாக சரிவு கண்டு வருவதால், அக்குழுவின் நிர்வாகி ஜூலென் லோப்பெட்டேகுய் நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதனால், ரியல் மாட்ரிட் குழுவின் நிர்வாகி பொறுப்பை மொரினோ ஏற்பார் என்று ஆரூடம் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒப்பந்தம் முடியும் வரையில் நான் மன்.யுனை. குழுவில்தான் இருப்பேன் என்று கூறியுள்ளார் மொரினோ.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker