Latestசினிமா

கவிஞர் வைரமுத்துவை ஓரங்கட்டுகிறார் ஏ.ஆர் ரஹ்மான்

சென்னை, அக்.24- மீ- டூ பாலியல் சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, இசைப் புயல்  ஏ.ஆர் ரஹ்மானை தொடர்பு கொண்டு பேச  மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

வைரமுத்து குறித்த சின்மயி கூறிய பாலியல் புகாரை தொடர்ந்து ஏராளமான பெண்களும் வைரமுத்துவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏ.ஆர் ரஹ்மானிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறியே வைரமுத்து பெண்ககுக்கு தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மானுடனான பழக்கத்தை வைரமுத்து தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் ஏ.ஆர் ரஹ்மான் சர்ச்சைக்குரிய நபர்களை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை ஒதுக்கி வைப்பதே அவருடைய வழக்கம்.

அந்த வகையில் இனி வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை என்கிற முடிவுக்கு ஏ.ஆர் ரஹ்மான் வந்து விட்டதாக தகவல் வெளியானது.

மேலும் பெண்கள் பலரிடம் வைரமுத்து தனது பெயரை பயன்படுத்தியிருப்பதும் ஏ.ஆர் ரஹ்மானுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்காக வைரமுத்து ஏ.ஆர் ரஹ்மானில் தனிப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரது அழைப்பை ஏ.ஆர் ரஹ்மான் ஏற்கவில்லை என்றும் தொடர்ந்து அவரது உதவியாளர்களை வைரமுத்து அழைத்தப் போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker