Latestமலேசியா

‘சம்பளம் போட கிளந்தான் அரசு கடன் கேட்டது!’ -ஆதாரத்தை தந்தார் லிம் குவான்

கோலாலம்பூர், அக்.24- கிளந்தான் மாநில அரசுச் சேவை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, கூட்டரசு அரசாங்கம் (முன்கூட்டியே) கடனுதவியை வழங்க வேண்டும் என்று கிளந்தான் மாநில அரசாங்கம் விண்ணப்பித்தது என்பதற்கான ஆதாரங்களை நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதியன்று, மத்திய அரசாங்கம் தங்களுக்கு கடனுதவியை வழங்க வேண்டும் என்று கிளந்தான் மாநில அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கான கடிதம் ஒன்றை குவான் எங் வெளியிட்டார்.

கிளந்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு மாதந்திர சம்பளம் மற்றும் அலவென்ஸ் வழங்குவதற்கு ரிம. 24.5 மில்லியனை முன்கூட்டிய கடனாக அது கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். “ஆனால், நிதியமைச்சு ரிம.22.5 மில்லியனை மட்டுமே வழங்க ஒப்புக் கொண்டது” என்று அவர் சொன்னார்.

கிளந்தான் அரசு தனது மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சிரமத்தை எதிர்நோக்கியதாக நேற்று நாடாளுமன்றத்தில் லிம் குவான் எங் கூறிய போது ‘அதற்கான ஆதாரங்கள் இருந்தால் நிருபியுங்கள்’ என்று பாஸ் எம்.பி.கள் சிலர் நேற்று அமளியில் ஈடுப்பட்டனர்.

அதன் அடிப்படையில் கிளந்தான் அரசு தனது ஊழியர்களுக்கு சம்பளம் போட, முன் கடனாக பணம் கேட்டு விண்ணப்பித்த ஆதாரத்தையும் கடன் வழங்கப்பட்ட ஆதாரத்தையும் லிம் குவான் எங் இன்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிம் குவான் எங் இன அடிப்படையில் செயல்படுவதாகவும், இஸ்லாமிய மதத்தை எதிர்க்கும் வகையில் நடந்துக் கொள்கிறார் என்றும் சில பாஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“நான் ஆதாரங்கள் அடிப்படையில் தகவல்களை வெளியிடுகிறேன். அவ்வாறு இருக்கும் வேளையில், நான் இனவாதியாக நடந்துக் கொள்கிறேன் என்று அவர்கள் எவ்வாறு குற்றஞ்சாட்டலாம்?

“பொதுவாக, முறையாக பொருளாதார நிர்வாகத்தை செயல்படுத்த இயலாதவர்கள் தான் இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்புவார்கள். இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வரும் பாஸ் தலைவர்கள், தங்களின் பொறுப்புகளை உணர்ந்து இனிமேற்கொண்டு செயல் படுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று லிம் குவான் எங் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker