Latestமலேசியா

சூடுபட்டு இறந்த போலீஸ்காரர் பிரிதிவிராஜ்: கொலையா, தற்கொலையா?

ஈப்போ,அக்.24- பெக்கான் பாரு போலீஸ் குடியிருப்பு பகுதியில் தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்தவர் போலீஸ் அதிகாரி பிரிதிவிராஜ் சில்வநாதன் என்பவர் என பேராக் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ ராஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

இன்று காலை 6.15 அளவில் துப்புரவு பணியாளர் ஒருவர் பிரிதிவி ரத்த வெள்ளத்தில் வடிக்கால் பக்கத்தில் கிடந்ததைப் பார்த்து போலீசுக்கு தகவல் அளித்திருக்கிறார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரிதிவி போலீஸ் சீருடையுடன் இறந்து கிடந்ததைப் பார்த்திருக்கின்றனர். அவரது பக்கத்தில் MP5 ரக கைத்துப்பாக்கியும் கிடந்திருக்கிறது. அந்த துப்பாக்கியில் உள்ள குண்டுதான் அவரது தலையைத் துளைத்திருக்கிறது.

பிரிதிவியின் உடலைப் பெற்றுக் கொள்ள ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனைக்கு வந்திருந்த அவரது குடும்பத்தார் குறிப்பாக அவரது தாயார் கண்ணீர் மல்கக் காணப்பட்டார்.

இந்நிலையில், இன்னும் திருமணமாதவரான 29 வயது பிரிதிவி தன்னைத் தானே சுட்டுக் கொண்டாரா அல்லது தவறுதலாக சூடு பட்டதா அல்லது இது கொலையா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவர் இரண்டு நாட்களுக்கு முன்தான் பெக்கான் பாரு போலீஸ் நிலையத்தில் தமது பணியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கு முன் அவர் இப்போ போலீ௶ மாவட்ட தலைமையகத்தின் குண்டர் கும்பல், சூதாட்ட, ஒழுங்கீனச் செயல் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி இருக்கிறார்.

2009-ஆம் ஆண்டில் இருந்து அவர் அரச மலேசிய போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker