Latestமலேசியா

ஜோ லோவை மீட்க ஹிஷாமுடின் உதவி! -ஐஜிபி வரவேற்பு

கோலாலம்பூர், அக்.24- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தேடப் பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோவை சீனாவிலிருந்து மலேசியாவிற்கு அழைத்து வர தாம் உதவ முன்வருவதாக முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் கூறியுள்ளதை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபூஸி வரவேற்றுள்ளார்.

தலைமறைவாகியுள்ளதாக நம்பப்படும் ஜோ லோவ் மற்றும் அவரின் தந்தையை மலேசியாவிற்கு அழைத்து வர ஹிஷாமுடின் முன்வருவதால் தமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று முகமட் ஃபூஸி சொன்னார்.

“உதவ முன்வருவதாக கூறும் ஹிஷாமுடின் செயல் குறித்து என்னால் எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது. இருந்த போதிலும், அவரால் நிச்சயமாக ஜோ லோவ்வை மலேசியாவிற்கு அழைத்து வர முடியும் என்றால், அதனை நான் வரவேற்கிறேன்” என்று அவர் கூறினார்.

தமது சொந்த செலவில் தான் சீனாவிற்கு சென்று, அங்கு தனக்கு உள்ள தொடர்பை பயன்படுத்தி, தன்னால் ஜோ லோவ்வை மலேசியாவிற்கு அழைத்து வர முடியும் என்று கடந்த திங்கட்கிழமையன்று ஹிஷாமுடின் தெரிவித்துக் கொண்டார்.

1எம்டிபி பண விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு, ஜோ லோவ்வை மலேசிய அரசாங்கம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணையம் தேடி வருகிறது.

அவர் சீனா மற்றும் தைவான் நாடுகளில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், ஆதாரப் பூர்வமாக ஏதும் இதுவரை நிரூபிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker