Latestமலேசியா

‘பணமல்ல, சேவையே முக்கியம்’ என்கிறார் விருதுபெற்ற மருத்துவ நிபுணர் பஷீர்!

ஜோர்ஜ் டவூன், அக்.24- இருதயம் மற்றும் நுரையீரல் மருத்துவ துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு ரிம.100,000 வரை சம்பளமாக பெறலாம். ஆனால், இவ்வாண்டிற்கான பிரசித்தி பெற்ற மெக்கோர்மக் (பதக்கம்) விருதை பெற்ற அத்தகைய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், அரசாங்க மருத்துவமனையில் குறைந்த வருமானத்திற்கு சேவையாற்றி வருவது ஏன் தெரியுமா?

“நரசுச் சேவையில், நோயாளிகளின் நிதி அழுத்தம் குறித்த கவலைக் கொள்ளாமல், என்னால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க முடிகிறது. நோயாளிகளுக்கு வழங்கப் படும் சிகிச்சைக்கான கட்டணத்தை அவர்களால் செலுத்த முடியுமா? என்ற கவலை இல்லாமல், அவர்களுக்குத் தேவையான சிறந்த சிகிச்சையை நான் வழங்கி வருகிறேன் என்கிறார் மருத்துவ நிபுணர் டத்தோ டாக்டர் பஷீர் அகமட்.

“கடுமையாக நோய்வாய் பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் போது, அவர்களின் நிதி நிலைமை குறித்த கவலை பொதுச் சேவையில் எனக்கு இல்லை. ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக என்னால் சிறப்பான சேவையை பொதுச் சேவையில் நோயாளிகளுக்கு வழங்க முடிகிறது” என்று டத்தோ டாக்டர் பஷீர் அகமட் கூறினார்.

உலகளாவிய நிலையில், ஒவ்வொரு ஆண்டும், அறுவை சிகிச்சை துறையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களுக்கு இங்கிலாந்தில் சோதனை நடத்தப் படுகிறது. அச்சோதனையில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் அறுவை சிகிச்சை நிபுணருக்கு ‘மெக்கோர்மக்’ விருது’ வழங்கப் படுகிறது.

இவ்வாண்டிற்கான சோதனையில், டாக்டர் பஷீர் தான் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த விருது கிடைத்த பின்னர், இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது. எனக்கு குறைந்தது மாதம் ஒன்றுக்கு ரிம.100,000 வரை சம்பளம் தருவதாக உறுதி வழங்கப் பட்டது.

“ஆனால், பினாங்கு மருத்துவமனையில், சேவையாற்றவே எனக்கு விருப்பம். அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலர் தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுப்பதற்கான அவசியத்தை என்னால் உணர முடிகிறது. அவ்வாறு செய்வதன் வாயிலாக நம்மால் நமது குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

தம்மால் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்று கூறிய அவர், தாம் இந்தப் பிரசித்தி பெற்ற விருதை பெற்றது குறித்த மகிழ்ச்சியை விரைவில் பகிந்ர்து கொள்ளப் போவதாக என்று சொன்னார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker