Latestமலேசியா

மலாயாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் முக்குளிப்பு தாரகை பண்டேலேலா!

கோலாலம்பூர்,அக்.24- தேசிய முக்குளிப்பு தாரகை பண்டேலேலா ரினோங்கும், தேசிய ஹாக்கி நட்சத்திரம் முகமட் பித்ரி சாரியும் நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.

25 வயதான இருவருமே ‘ஸ்போர்ட் சைன்ஸ்’ துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் பட்டம பெற்ற 5,279 பட்டதாரிகளில் அவர்களும் அடங்குவர்.

இந்நிலையில், தமது பட்டக்கல்வியை சுமூகமாக முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த சக மாணவர்களுக்கு பண்டேலேலா நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“படிப்பும் விளையாட்டும் என நேரத்தை நிர்வகிப்பதில் நான் சிரமத்தை எதிர்நோக்கினேன். இருந்தும், நண்பர்களின் உதவியால் நான் வெற்றிகரமாக படிப்பை முடித்து இப்போது பட்டமும் பெற்றுள்ளேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

I've been waiting for 5 and the half years to do this.🎓📸 : @khairunneetaaa #umconvo2018 #throwit #graduation #universitimalaya #smartiscoolday

Posted by Pandelela Rinong_Official on Tuesday, 23 October 2018

மாறாக, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவிருந்ததால் தான் ஒமனில் நடக்கும் ஆசிய கிண்ண ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதாக பித்ரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

எனினும், கல்விக்கான இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் தான் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டேலேலா, பித்ரி இருவருடன் தைக்குவாண்டோ வீராங்கனை ரியான் சோங் வாய் லூனும், பூட்சால் வீராங்கனை நூருல் அத்திக்கா சைபுலிசானும் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker