Latestஉலகம்

பத்திரிகையாளர் கஷோக்கியின் உடல் துண்டு துண்டாக கிணற்றில் கிடந்தது!

இஸ்தான்புல், அக் 24- துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் துண்டுத் துண்டுகளாக ஆக்கப்பட்ட உடல் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டுத் தோட்டத்திலுள்ள கிணற்றில் கண்டு பிடிக்கப் பட்டது.

அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, கடந்த 2 ஆம் தேதி தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார்.

முதல் மனைவியை விவகாரத்துச் செய்ததற்கான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அங்குள்ள சவுதி தூதரகத்திற்குள் சென்ற ஜமால் கஷோக்கி அதற்கு பின் வெளியே வரவில்லை.

அவரைத் தூதரக அதிகாரிகள் கொலைச் செய்து விட்டதாக துருக்கி அரசும் ஊடகங்களும் சந்தேகம் எழுப்பின. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வந்தது. அனைத்துலக நாடுகள் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து தூதரகத்திற்குள் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டதைச் சவுதி ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் கஷோக்கியின் உடல் என்ன ஆனது என்பது மர்மமாக இருந்து வந்தது. முடிவில் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்திருக்கிறது. அவரது உடல் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்து கிணற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவரது முகம் சிதைப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பல துண்டுகளாக அவரது உடல் பாகங்கள் அதிகாரியின் தோட்டத்தில் இருந்த கிணற்றில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker