Latestமலேசியா

கோலப்பிலா சட்டமன்ற உறுப்பினர் மீது பில்லி சூன்ய ஏவலா?

கோலாலம்பூர், அக்.25- பிகேஆர் கட்சியைச் சேர்ந்த கோலப் பிலா சட்டமன்ற உறுப்பினரான முகம்மட் நஷாருடின் சப்து, அண்மைய காலமாக மர்மமான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை, அவர் பில்லி சூன்யத்தின் தாக்கத்தினால் அவர் பாதிக்கப் பட்டிருக்கக் கூடும் என்று அவரது உதவியாளர் நம்புகிறார்.

கடந்த மாதம் 9 ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நஷாருடின் நோய்வாய்ப் பட்டதாகவும் ஹரிராயாவுக்கு பின்னர் அவரது நிலைமை மோசமடைந்ததாகவும் அவருடைய உதவியாளர் அமிருடின் முகம்மட் தெரிவித்தார்.

அவரை நாங்கள் மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர் மனஉளைச்சலில் இருக்கிறார் என்று தெரிவித்தனர் என்றார் அவர்.

பின்னர் அவருக்கு பாரம்பரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட தாங்கள் ஐந்து இடங்களில் அவருக்கு அத்தகைய சிகிச்சைகளை அளித்ததாகவும் ஆனால் அந்த இடங்களில் எல்லாம் அவருக்கு எதிராக பில்லி சூன்யம் ஏவப்பட்டு இருக்கலாம் என்றும் கூறினர் என அமிருடின் குறிப்பிட்டார்.

நோய்வாய்ப்பட்ட தொடக்கக் கட்டத்தில் அவரால் உணவு உண்ணக் கூட முடியவில்லை. பாரம்பரிய மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் கொஞ்சம் உணவருந்தும் நிலைக்கு அபிவிருத்தி கண்டதாக அவர் சொன்னார்.

நெகிரி செம்பிலானின் கலை, கலாசார மற்றும் மலாய் பாரம்பரியக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்த நஷாருடின், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை.

அண்மைய காலமாக சட்டமன்றக் கூட்டத்தில் கூட அவர் கலந்து கொள்ளவேயில்லை. அவரது தொகுதிகளை நிலவரங்களைக் கவனிக்க கோலப் பிலா சேவை மையத்தில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

முன்பு கோலப்பிலா டிவிசன் பிகேஆர் துணைத் தலைவராக பொறுப்பு வகித்த அவர், இம்முறை கட்சித் தேர்தலிலும் பங்கேற்கவில்லை.

கடந்த பொதுத் தேர்தலில் கோலப் பிலா சட்டமன்றத் தொகுதியில் அம்னோ மற்றும் பாஸ் கட்சி வேட்பாளர்களை 1,806 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து நஷாருடின் சட்டமன்ற உறுப்பினரானார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker