Latestமலேசியா

ரிம.660 கோடி நம்பிக்கை மோசடி: மறுத்தனர் நஜிப்- இர்வான் ஜோடி!

கோலாலம்பூர்,அக்.25- அரசாங்கப் பணம் 6.6 பில்லியன் (660 கோடி) ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்ததாக தங்களின் மீது சுமத்தப்பட்ட 6 குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும், நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ டாக்டர் இர்வான் செரிகார் அப்துல்லாவும் மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

அரசாங்கப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் பிரதமர் பதவி வகித்த நஜிப், நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் பதவி வகித்த இர்வான் செரிகார் ஆகியோரை நம்பி அரசாங்கப் பணத்தின் மீதான பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், அவர்கள் அந்தப் பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டு சிறை, பிரம்படி, அபராதம் ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம்.

அரசாங்கத்தை பிரதிநிதித்து வழக்காடும் வழக்கறிஞர்கள் குழுவுக்கு முன்னாள் கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதி டத்தோஶ்ரீ கோபால் ஶ்ரீராம் தலைமையேற்றார். மாறாக, நஜிப் சார்பில் வழக்கறிஞர்கள் டான்ஶ்ரீ முகமட் ஷாப்பி அப்துல்லாவும், டத்தோ கே.குமரேந்திரனும் ஆஜராகிய வேளை இர்வான் செரிகார் சார்பில் வழக்கறிஞர் டத்தோ கீத்தன் ராம் வின்சன் ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker