Latestமலேசியா

அம்னோ உறுப்பினர்கள் பெர்சாத்து கட்சியில் சேரலாம்!- துன் மகாதீர்

பேங்கோக்,அக்.26- அம்னோ கட்சி உறுப்பினர்கள் பெர்சாத்து கட்சியில் சேர அனுமதிக்கப்படுவர் என்று, அக்கட்சியின் தேசியத் தலைவரும் பிரதமருமான துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

ஆனால், சில காலத்திற்கு அவர்கள் கட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெளிவுப்படுத்தினார்.

தற்போது முக்கிய எதிர்க்கட்சியாகத் திகழும் அம்னோவிலுள்ள உறுப்பினர்கள், தங்கள் கட்சியின் மீது அதிருப்தி கொண்டிருந்தால் பெர்சாத்து கட்சியில் சேருவதைத் தாம் வரவேற்பதாக அவர் சொன்னார்.

தாய்லந்திற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் அந்நாட்டிலுள்ள மலேசியர்களைச் சந்தித்துப் பேசியபோது அதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக பெர்சாத்து கட்சியைத் தொடங்கினார் துன் மகாதீர்.

அப்போது பிரதமராக இருந்த டத்தோஶ்ரீ நஜிபின் ஊழல் மிகுந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து கவிழ்க்கும் குறிக்கோளுடன் அந்தக் கட்சி செயல்பட்டது. அது போலவே அப்போதைய எதிர்க்கட்சிகளின் கூட்டணியோடு கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker