Latestமலேசியா

தங்ஜோங் மாலிம் காட்டுக்குச் சென்ற 34 UTM மாணவர்களை காணவில்லை!

தஞ்ஜோங் மாலிம்,அக்.26- ரிசோர்ட் ரீவர் வியூவுக்கு பின்னால் உள்ள காட்டுக்கு நடைப் பயணம் சென்ற 34 மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் அந்தக் காட்டில் வழி தவறி மாட்டிக் கொண்டதாக ஐயுறப்படுகிறது.

அந்த மாணவர்களை காணவில்லை என்று நேற்று மாலை 6.25 மணிக்கு தகவல் கிடைத்ததாக தஞ்ஜோங் மாலிம் தீயணைப்பு மீட்புத் துறை அமலாக்க அதிகாரி சைனி சால்லே தெரிவித்தார்.

அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“அந்தக் காட்டில் தொலைத் தொடர்பு இணைப்புகள் சரியாக கிடைக்காது என்பதால் பல வழிகளில் தகவல்களைத் திரட்டி வருகிறோம்” என்றார் அவர்.

இந்த தேடல் பணியில் தீயணைப்பு வீரர்கள் எழுவர், போலீசார் இருவர், மக்களில் இருவர் என மொத்தம் 11 பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker