Latestஉலகம்

நடுவானில் விமானம் மாயம்! கடலில் விழுந்ததா? தேடுதல் தீவிரம்

வாஷிங்டன், அக்.26- அமெரிக்காவிலிருந்து, பஹாமா தீவுகளுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று வழியிலேயே மாயமாகி விட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவிலுள்ள தெற்கு கரோலினாவின் ரோபர்ட் எஃப் ஸ்வின்னி விமான நிலையத்திலிருந்து பஹாமா தீவுகள் நோக்கி பயணப்பட்ட விமானம், நேற்று காலை 11.33 மணியளவில் தென்கிழக்காக பயணிக்கும் போது காணாமல் போனது.

அமெரிக்கக் கடலோர காவல் படையினரும் கப்பல் படையினரும் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஜேக்சன்வில்லே கட்டுபாட்டு அறைக்கு விமானம் ஒன்றிலிருந்து அவசர செய்தி வந்ததாகவும் அந்த விமானம் ராடாரிலிருந்து மறைந்ததால் விமானப்பட மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்ததாகவும் கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளாகிய அந்த விமானம் ஒரு சிறிய இரட்டை எஞ்ஜின் கொண்ட விமானமாகும். அதில் ஒன்பது பயணிகள் வரை பயணிக்கலாம். இந்நிலையில் பல இராணுவ விமானங்களும் கப்பல்களும் அந்த விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker