Latestமலேசியா

பிரபுவின் மரண தண்டனை: மலேசிய மனுவை நிராகரித்தது சிங்கை!

சிங்கப்பூர்,அக்.26- போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரபு பத்மநாதன் என்ற இளைஞரின் உயிரைக் காப்பாற்ற இறுதி வரையில் போராடியும் அந்நாட்டு அரசாங்கம் மலேசிய அரசாங்கத்தின் கோரிக்கையையும் பிரபு குடும்பத்தாரின் மனுவையும் நிராகரித்து விட்டது.

31 வயது பிரவுக்கு நான்காண்டுகளுக்கு முன் தூக்குத் தண்டனையை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இன்று அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றவிருப்பதால் அத்தண்டனையை நிறுத்தி வைக்குமாறு அவரது குடும்பத்தார் சிங்கப்பூர் அதிபருக்கு மனு அனுப்பியிருந்தனர்.

தூக்குத் தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையை விதிக்கலாம் என்று மலேசிய அரசாங்கமும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருந்தது.

எனினும், அக்கோரிக்கையை மறுத்து சிங்கப்பூர் அதிபர் அலுவலகம் நேற்றிரவு பிரபுவின் சகோததருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக லாயர்ஸ் ஒப் லிபெர்ட்டி என்ற வழக்கறிஞர்கள் அமைப்பின் ஆலோசகர் என்.சுரேந்திரன் தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு, ஜொகூர் பாலம் வாயிலாக போதைப் பொருளைக் கடத்திச் சென்றதாக பிரபு மீது குற்றஞ்சாட்டப் பட்டு, நீதிமன்றத்தில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது.

அந்தப் போதைப் பொருள், வேறு ஓர் ஆடவருக்கு சொந்தமான காரில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டதாகவும், வற்புறுத்தலின் பேரில் தான் பிரபு அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker