Latestஉலகம்

பேஸ்புக்கின் துப்புரவு வேலை: 8.7 மில்லியன் சிறார் பாலியல் படங்கள் நீக்கம்!

வாஷிங்டன், அக்.26- கடும் விமர்சனங்களை அடுத்து பேஸ்புக் 8.7 மில்லியன் சிறார் பாலியல் படங்களை நீக்கியுள்ளது. சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் புகைப்படங்கள் பேஸ்புக்கில் நிறைந்திருப்பது தொடர்பாக பிபிசி விசாரணையை செய்து செய்தியை
வெளியிட்டது.

இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதன்பின் குழந்தைகள் பாலியல் தொடர்பான புகைப்படங்களை முடக்க பேஸ்புக் நடவடிக்கையை மேற்கொண்டது.

இப்போது புதிய தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 8.7 மில்லியன் எண்ணிக்கை அளவில் இடம்பெற்ற சிறார்களை ஆபாசமான தோற்றத்தில் காட்டும் படங்கள், தவறாகச் சித்தரிக்கும் அம்சங்களை அகற்றிவிட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

படங்களை அகற்றச் செயற்கை நுண்ணறிவு பிரிவு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது. படங்களை வலைதளத்தில்
ஏற்றியவர்களுக்கு தகவல்கள் அனுப்பிய பிறகு கிட்டத்தட்ட அனைத்து படங்களும் 99% அகற்றப்பட்டுவிட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையப் பாதுகாப்பு, பகுப்பாய்வு மற்றம் தடவியல் விசாரணைகள் போன்றவற்றில் செயல்பட சட்ட அமலாக்க பின்னணி கொண்டவர்களிடம் பயிற்சி பெற்ற
சிறப்பு தொழில் நுட்பக் குழு எங்களிடம் உள்ளது. இவர்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை மறுபரிசீலனை செய்வர் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker